Ad Widget

யாழ்ப்பாணம் வரவேற்பு வளைவு திறப்பு

jaffna-entranceநல்லூர் பிரதேச சபையினால் வீதி அபிவிருத்தி அதிகார சபை வழங்கிய ஒரு மில்லியன் ரூபா செலவில் நாவற்குழியில் A9 வீதியில் நிர்மாணிக்கப்பட்ட  யாழ்ப்பாணம் வரவேற்பு வளைவு நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நல்லூர் பிரதேச சபைத்தலைவர் வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழா நிகழ்வில், பிரதம அதிதியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கலந்துகொண்டு வளைவினை திறந்துவைத்தார்.

1970ஆம் ஆண்டு யாழ் மாநகர சபை முதல்வராக இருந்த நாகராசா என்பவரால் இந்த வளைவு நிர்மாணிக்கப்பட்டது. யுத்த காலத்தில் இந்த வளைவு பல்வேறு சேதங்களுக்கும் உள்ளான போதும் ஏ – 9 வீதி அபிவிருத்தி பணியின் போது வீதி அகலிப்புக்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் இந்த வளைவு இடிக்கப்பட்டது.நட்ட ஈடாக ஒரு மில்லியன் ரூபாவையும் வழங்கியிருந்தது.

மீண்டும் நல்லூர் பிரதேச சபையின் அபிவிருத்தி நிதியில் இருந்து ஒரு மில்லியன் ரூபா செலவில் இந்த வளைவு மீண்டும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த வளைவு திறப்பு விழா நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், ஈ.சரவணபவன், தமிழரசுக் கட்சியின் துணைச் செயலாளர் சி.வி.கே.சிவஞானம், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த வளைவில் யாழ்ப்பாணம் என்ற பெயர் அல்லாமல்  ”யாழ் நகர் வரவு நல்வரவாகுக” என்று தமிழில் எழுதப்பட்டமை பல்வேறு தரப்பினராலும்  விமர்சிக்கப்பட்டிருந்த நிலையில் வளைவு திறந்து வைக்கப்படிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தில் WELCOME TOJAFFNA என ஆங்கிலத்தில் எழுத்பட்ட இடத்தில் TOJAFFNA என சேர்த்து எழுதப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

j1

தொடர்புடைய செய்தி

த.தே.கூ.பின் அத்திவாரம் தமிழரசுக் கட்சியே: மாவை எம்.பி

Related Posts