த.தே.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிக்களுக்கிடையில் மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம்! சிவாஜிலிங்கம்

sivajilingam_tna_mpதமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. இதற்கான பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர; எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளுக்கிடையிலும், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். கட்சிகளின் நடைமுறைகள், அமைப்பு விதிகள் தயாரிக்கப்பட்டு ஏனைய கட்சிகளிடமும் ஆலோசனைகள் கருத்துக்கள் பெறப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்படும். இலங்கை தமிழரசுக்கட்சி எங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வந்துள்ளமை நல்லதொரு விடயமாகும்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் நியமிக்கப்படவுள்ள குழுவில் தமிழரசுக்கட்சியை சேர்ந்த எட்டுப்பேரும் அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்களும் ரெலோ அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருவரும் மற்றும் அக்கட்சியின் எம்.பி.க்களும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள்.

இதனைவிட எட்டு பேருக்கு மேலதிகமாக தாங்கள் இன்னும் சிலரை நியமிக்க வேண்டுமென்றும், அந்தவகையில் அம்பாறை, திருகோணமலை, வன்னி போன்ற மாவட்டங்களில் மேலும் சில பிரதிநிதிகளை நியமிக்க விரும்புவதாகவும், பெண் பிரதிநிதியொருவரையும் நியமிக்க வேண்டுமென்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்பந்தன் தெரிவித்த கருத்தை நாம் ஏகமனதாக ஏற்றுக்கொண்டோம்.

அதுமாத்திரமன்றி அமைக்கப்படும் குழுவில் 25 பிரதிநிதிகள் பரந்துபட்ட அளவில் ஏனைய கட்சிகள் உள்ளடங்களாக குறிப்பாக கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளும் தமது பிரதிநிதிகளை நியமிக்க வாய்ப்பளிக்கும் விதத்தில் பரந்துபட்ட பிரதிநிதித்துவத்தை நாம் ஏற்றுக்கொண்டோம் என்று தெரிவித்தார்

Related Posts