உலகளாவிய ரீதியில் பசிக் கொடுமையை ஒழிக்கப்பட வேண்டுமாயின் எதிர்காலத்தில் மனிதர்களால் பூச்சிகளை உட்கொள்ளக் வேண்டிவரும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பே மேற்கண்டவாறு கூறியுள்ளது.
ஏற்கனவே 200 கோடி மக்கள் தமது உணவில் வெட்டிக் கிளி, வண்டு, எறும்பு உள்ளிட்ட பூச்சிகளை சேர்த்துக் கொள்வதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பெரிய அளவில் பண்ணைகள் வைத்து தொழில் முறையில் பூச்சிகளை உற்பத்தி செய்வது வருங்காலத்தில் உணவுப் பாதுகாப்புக்கு உத்தரவாதத்தை அளிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேகமாக இனப் பெருக்கம் செய்யும் தன்மை கொண்ட பூச்சிகளிடம், புரதச் சத்து அதிகம் காணப்படுகிறது. மீன் மற்றும் கால்நடைகளின் உணவாகவும் இவற்றை பய்ன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது.
அதேநேரம் பூச்சியை சாப்பிடுவதா என்று மேற்கத்திய நாடுகளின் நுகர்வோரிடம் காணப்படும் அருவருப்பு, பூச்சிகள் அதிகம் உணவுக்காக பயன்படுத்தப்படுவதை தடுக்கலாம் என்றும் ஐ நா அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சீனா, தென்-கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் பூச்சிகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. மேற்கத்திய நாடுகளில் சில ஹோட்டல்களில் இவை அபூர்வப் பொருளாக பரிமாறப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.