புயல் அபாயம் நீங்கியது

puyalயாழ். குடாநாட்டில் புயல் அபாயம் நீங்கிய போதும் மப்பும் மந்தாரமுமான கால நிலையே இன்றும் நீடிக்கும் என யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவிலிருந்து 750 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்த “மகா சென்’ புயல் நேற்றுக் காலை யாழ். குடா நாட்டுக்கு மேலாகக் கரையைக் கடந்தது.

நேற்றுக்காலை கிடைக்கப் பெற்ற வானிலை அவதானிப்பு நிலைய அறிவுப்புக்களின் பிரகாரம் இன்றும் வானம் மப்பும் மந்தார முமாக காணப்படுவதுடன் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலையிலிருந்து காலை 8.30 மணி வரை 62.5 மில்லி மீற்றர் மழையும் காலை 8.30 மணியிலிருந்து பி.ப. 2.30 மணி வரையும் 4.5 மில்லி மீற்றர் மழையும் பதிவாகியது.

Related Posts