வட மாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, இந்த தேர்தலுடன் தொடர்புடைய விடயங்கள் பற்றி பேசுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்த வார இறுதியில் சந்திக்கவுள்ளார்.
எனினும் ஆளும் கட்சி பட்டியலில் மாகாண சபை தேர்தலுக்கான வேட்பாளர்களை நிறுத்துவது பற்றி எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தேர்தல் பற்றி மேலெழுந்த வாரியான கருத்தாடல்கள் நடந்துள்ளன. நான் இந்த வார இறுதியிலேயே ஜனாதிபதியை சந்திக்கவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.