யாழ்.நகரில் இளம் வர்த்தகர் ஒருவர் நஞ்சருந்தி நேற்று வியாழக்கிழமை உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தச் சம்பவம் நல்லூர் சங்கிலியன் வீதி, பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ். நகர் கஸ்தூரியார் வீதியில் வர்த்தகத்தை மேற்கொள்ளும் வர்த்தகரான சந்தானம் சசிக்குமார் (வயது23) என்பவரே பலரிடம் கடன் பெற்று அதனை மீளச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
நேர்மையான இளைஞராக திகழ்நத இவர் இன்னொருவருக்காக பல லட்சம் ரூபா கடன் வாங்கிக்கொடுத்ததாகவும். அதனை மீளவும் கொடுத்தவரிடமிருநது வாங்கி கொடுக்க முடியாமல்போனதாகவும்,அதற்காக பொலிஸ் விசாரணை ஒன்றை எதிர்கொள்ளவேண்டியிருந்தமையினால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்ததாக நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்திருககிறது
கடன் தொல்லையால் ஏற்பட்ட உளத் தாக்கத்தினாலேயே அவர் நஞ்சை உட்கொண்டு சாவைத் தழுவினார் என்று தெரிய வந்தது என்று யாழ். போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி என்.பிரேம்குமார் தெரிவித்தார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.