ஈ.பி.டி.பி யினருக்கு எதிராக துண்டுப்பிரசுரம் வினியோகத்தவர்களுக்கு எதிராக அமைச்சர் பொலிஸில் முறைப்பாடு

daklasஈ.பி.டி.பி யினருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமான துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்தவர்களுக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸ்சில் முறைப்பாடு செய்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தினருக்கு எதிராக அமைச்சர் யாழ் பொலிஸ் நிலையத்தில் தனது முறைப்பாடை பதிவு செய்துள்ளார்.

இவ் அமைப்பினர் அமைச்சருக்கும் அமைச்சரின் கீழ் இயங்கும் மகேஸ்வரி நிதியத்திற்கும் எதிராக கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சிலும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வந்துள்ளனர்.

இதன்போது இவர்கள் மீது யாழ்.கச்சேரிக்கு முன்னால் தாக்குதல் நடத்தப்பட்டு ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையிலேயே அமைச்சர் இவர்கள் மீது முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“போரால் பாதிக்கப்பட்ட அமைப்பினால் தனக்கு எதிராக விநியோகிக்கப்பட்டு வரும் துண்டுப்பிரசுரம், தனக்கும் தனது கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன், பொதுமக்களுக்கு என்மீது வன்முறை ஏற்படுத்தும் வகையில், அமைந்துள்ளதாகவும், இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்”.

இதேவேளை, இந்த அமைப்பினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் அமைப்பு பதிவு செய்தமைக்கான பதிவு இலக்கம் குறிப்பிடப்படவில்லை என்றும் இந்த அமைப்பு சட்ட ரீதியாக நடத்தப்படுகின்றதா என்பதனை ஆராயுமாறும் இந்த அமைப்பு எனக்கு எதிராக துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வந்த நிலையில், இந்த அமைப்புக்கு எதிராக வன்முறைகள் இடமபெற்றால், அதற்கு நான் பொறுப்பென்று கூறுமிடத்து அதற்கான எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த முறைப்பாட்டில் அமைச்சரினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts