நல்லூர் அரசடிப் பகுதியில் தன்னைத் தானே தீ மூட்டி எரிந்துள்ள வயோதிபர் ஒருவரை சடலமாக யாழ்ப்பாண பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அரசடியைச் சேர்ந்த நவரட்ணம் கணேசமூர்த்தி (வயது 55) என்ற வயோதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.