யாழ். மாநகர சபையின் கட்டிட நிர்மாணத்திற்கு 800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

MAYOR -yokeswareyயாழ். மாநகர சபையின் புதிய கட்டிட நிர்மாணத்திற்கு 800 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் கடந்த புதன்கிழமை யாழ். மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி நான்கு கட்டங்களாக வழங்கப்படவுள்ளது என அவர் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் பழைய இடத்திலேயே புதிய கட்டிடத்திற்கான ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக அவர் மேலும் கூறினார்

Related Posts