எரிபொருள் நிலைய பணியாளருக்கு திடீர் தீயை அணைக்கும் பயிற்சி

Petrol-priceயாழ்.குடாநாட்டில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் தீயணைப்புக் கருவிகளை பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை வீரசிங்கம் மண்டப முன்றிலில் இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் விற்பனை நிலையங்களின் பணியாளர்களுக்கு இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. எரிபொருள் விற்பனை நிலையங்களில் திடீரெனத் தீ விபத்து இடம் பெற்றால் உடனடியாக அதனைத் தீயணைப்புக் கருவி மூலம் கட்டுப்படுத்துவது குறித்து விரிவான பயிற்சிகள் எரிபொருள் விற்பனை நிலையப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

“பயர் டிராப்ற்’ நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் டபிள்யூ. எஸ்.எஸ்.கே.ஜெயவர்த்தன இந்தப் பயிற்சிகளை வழங்கினார். இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வடமாகாண முகாமையாளர் வி.சண்முகநாதன், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் வீ.கே. அருந்தவ நாதன், கூட்டுறவுச் சபை தலைவர் ராஜாராம் மற்றும் அதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

எரிபொருள் விற்பனை நிலையங்களில் தீ விபத்துக்கள் இடம்பெற்றால் அதனை அணைப்பதற்கு தீயணைக்கும் கருவிகள் எந்த நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் ஜெயவர்த்தன கூறினார்.

Related Posts