சிலின்டர் வெடித்ததில் யாழ். பெண் கொழும்பில் பலி

accidentகொழும்பு – 15, மோதர பிரதேசத்திற்குட்பட்ட வீடொன்றில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இப் பெண் தற்போது கொழும்பு – 15, மோதர பிரதேசத்தில் வசித்து வருகின்றார்.

இந்த நிலையிலேயே அவர் வசித்து வந்த வீட்டில் கேஸ் சிலின்டர் வெடித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மோதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts