மோட்டார் வாகன பதிவுக் கட்டணம் அதிகரிப்பு!

fineமார்ச் 1ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் மோட்டார் வாகன பதிவு கட்டணத்தை அதிகரிக்க மாகாண ஆணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் எஸ்.எச்.ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2013 வரவு – செலவு திட்டத்தின்படி மோட்டார் வாகன ஆதாயபத்திர கட்டணம் 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்த கட்டண உயர்வு மேல் மாகாணத்தில் மே மாதம் 2ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வருவதாகவும், நிதி அமைச்சு இது குறித்து தமக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் மேல் மாகாண போக்குவரத்து ஆணையாளர் சாந்த குமார முகந்திரம் தெரிவித்துள்ளார்.

Related Posts