வடமாகாணத்தில் பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண சிறுவர் பராமிரிப்பு நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளர் தங்கவேல் உமா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 352 சிறுவர் இல்லங்கள் செயற்பட்டு வருவதாகவும் வடக்கில் மாத்திரம் 78 சிறுவர் இல்லங்கள் தற்போது உள்ளது என்றும் 4000 சிறுவர்கள் இச் சிறுவர் இல்லங்களில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
வடக்கில் உள்ள சிறுவர் இல்லங்களில் 80 வீதமானவை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 20 வீதமானவை பதிவு செய்யாமல் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு பதிவு செய்யாமல் செயற்படும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளை சிறுவர் பராமிரிப்பு நன்னடத்தை திணைக்களம் மேற்கொண்டு வருவதாக தற்போது பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களை பாடசாலைகளில் இடமாற்றுவதில் உள்ள பிரச்சனை கவனத்தில் எடுக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.