வலிகாமம் வடக்கு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் விபரங்கள் பிரதேச செயலகம் ஊடாக ஜனாதிபதி செயலக விசேட செயலணியால் திரட்டப்பட்டு வருகின்றது.
யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆங்கில மொழியில் மாத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள படிவத்தில் குடும்ப விபரங்கள், இடம்பெயர்ந்த காலம், தற்போதைய வசிப்பிடம் மற்றும் எந்தெந்த இடங்களில் காணி உள்ள போன்ற விடயங்கள் திரட்டப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ஆங்கில மொழியில் இந்த படிவம் விநியோகிக்கப்படுவதால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை காணப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த நல்லூர் பிரதேச செயலாளர், இது ஜனாதிபதி செயலக விசேட செயலணியால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தகவல்களை இலகுவில் விளங்கிக்கொள்ளும் நோக்கில் ஆங்கிலத்தில் குறித்த படிவம் விநியோகிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அத்துடன் ஜனாதிபதி செயலக விசேட செயலணியால் மாவட்டச் செயலகம் ஊடகாக விநியோகிக்கப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.