வடக்கில் இராணுவப் பிரசன்னம் அதிகம் : வாசுதேவ நாணயகார

vasudeva_nanayakkaraவடக்கில் அதிகளவு இராணுவப் பிரசன்னம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவருவது முற்றிலும் உண்மையென சமூக மேம்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார். இதேவேளை வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை அரசாங்கம் மேற்கொள்கின்றது என்ற குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

வடக்கில் இனப்பரம்பலில் அரசாங்கம் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக கூட்டமைப்பினர் கூறும் குற்றச்சாட்டானது ஏற்க முடியாதது. ஆனால் வடக்கில் இராணுவப் பிரசன்னம் அதிகம். குடியியல் நிர்வாகத்தில் இராணுவத்தினர் தலையீடுகள் உள்ளன. வடக்கில் குடியியல் நிர்வாகம் இல்லை. எனவே இராணுவப் பிரசன்னத்தைக் குறைத்து இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி முழமையான குடியியல் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இதேவேளை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை படிப்படியாக அமுல்படுத்தி வருகின்றது. வடக்கில் தமிழ் மக்களை அரசாங்கம் அடிமைப்படுத்தவில்லை. தமிழ் மக்களின் தேவைகளை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts