எமது போராட்ட வரலாற்றி பொன்னாலை புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்த இடம்!- சிறீதரன் எம்.பி

Sritharanபொன்னாலை மண் என்பது எமது போராட்ட வரலாற்றில் முதன்மையானது. எமது போராட்டத்தின் வரலாற்றில் பொன்னாலை வரதராஜப் பொருமாள் கோயில் என்பது மிகவும் முக்கியமானதும் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்த இடமாக உள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அமரர் எஸ்.எஸ். சின்னையா ஞாபகார்த்தமாக நேற்று முன்தினம் புருவருடத்தினத்தன்று பொன்னாலை மான்பாய்ந்த தரவையில் நடைபெற்ற மாட்டுவண்டிச் சவாரி நிகழ்வில் பிரதம விருந்தினராக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் இந்நிகழ்விற்கு மாட்டு வண்டிகள் போட்டியில் வந்து கலந்து கொண்டதோடு, பெருமளவான மக்களும் இதனைக் கண்டு கழித்தனர்.

இந்நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்.

இரண்டு தசாப்தங்களின் பின்னரே மாட்டுவண்டிச் சவாரி, கைக்கொடி சவாரி, காளை அடக்குதல் போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறுகின்றன. அந்த வகையில் இந்த போட்டிகள் மீண்டும் நடைபெறுவது மிக நல்ல ஒரு விடயம்.

பொன்னாலை என்பது எமது போராட்ட வரலாற்றில் முதன்மையானது. எமது போராட்டத்தின் வரலாற்றில் பொன்னாலை வரதராஜப் பொருமாள் கோயில் என்பது மிகவும் முக்கியமானதும் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்த இடமாகவும் உள்ளது.

அந்த மண்ணில் மீண்டும் இப்போட்டிகளை ஆரம்பிக்கப்பட்டிருப்பது மிகவும் நல்லது.

இன்று எமது இனம் மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்குள்ளாகத் தள்ளப்பட்டிருந்தாலும் இனத்தின் அடையாளங்களை பாதுகாக்கும் கடமை எங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் என்றார்.

Related Posts