யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட 300ற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களின் வீடுகள் இராணுவத்தினர் வசம்

tna-pressmeat-clubயாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட 300 மேற்பட்ட குடியிருப்பாளர்களின் வீடுகளை இராணுவத்தினர் தம்வசம் வைத்திருப்பதாகவும், அவற்றிலிருந்து இராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட மக்களின் வீடுகள், வியாபார ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொதுமக்களின் காணிகளில் இராணுவத்தினர் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக வைத்துக் கொண்டு அந்த மக்களை மீளக்குடியமர விடாமல் தடுத்து வருகின்றனர்.

மக்கள் யுத்தம் முடிவடைந்த பின்னரும் சொந்த வீடுகளைப் பார்வையிட முடியாத இக்கட்டான நிலையில் இருக்கின்றனர். அத்தோடு மக்கள் பெருவாரியாக வசித்து வரும் பகுதிகளில் படை முகாம்கள் அமைக்கப்பட்டு பாரிய இராணுவ ஆயதங்கள் அந்தப்பகுதிகளில் வைக்கப்பட்டு இருக்கின்றது.

தவறுலதாக இராணுவ முகாம்களில் வெடி விபத்து ஏற்படுமானால் பொதுமக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். யுத்ததிற்கு பின்னரும் வெடி விபத்து ஏற்படலாம் என்ற அச்சம் யாழ்.மாநகர சபை எல்லைக்குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இராணுவத்தினர் யாழ்.மாநகர எல்லையில் சுவீகரித்து இருக்கும் பொதுமக்களின் வாழ்வியல் இடங்களை விட்டு வெளியேறி மக்களை நிம்மதியாக வாழ்வதற்கு வழி செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts