யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், பொது இடங்களில் சிகரெட்டுடன் அநாகரீகமாக நடந்து கொண்டது பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இக்குழுவினர் கலந்து கொண்ட நிகழ்வுகளின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கையில் சிகரெட்டுடன் வலம் வந்தனர். அதேபோல் சிலர் ஒவ்வொரு இடங்களிலும் நின்று புகைப்படங்கள் எடுப்பதில் மட்டும் ஆர்வங் கொண்டிருந்தனர்.
இன்னமும் சில உறுப்பினர்கள் யாழ்ப்பாண கதலி வாழைப்பழம் சுவையாக உள்ளதாகத் தெரிவித்து, கும்பங்களில் வைத்திருந்த வாழைப்பழங்களையும் தேடித் தேடி உண்டனர்.
இவர்கள் இவ்வாறான நடவடிக்கைகள் பொது மக்கள் மத்தியில் மிகவும் கவலைக்குரியதாக மாறின.
தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் பலத்த எதிர்பார்ப்புக்களுடன் யாழ்ப்பாணத்திற்கு வந்த இக்குழுவினர், ஒரு நகைச்சுவைக் குழுவினர் போல செயற்பட்டது மக்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.
இலங்கையில் பொது இடங்களில் புகைப்பிடித்தல் தண்டனைக்குரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.