இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய குழு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வருகை தந்த குழுவினரை யாழிலுள்ள இந்திய துணை உயர் ஸ்தானிகர் வே. மகாலிங்கம் வரவேற்றார்.
இந்த குழுவில் நாடளுமன்ற உறுப்பினர்களான சௌகத்தா றோய், சந்தீப் தீக்த், அனுரா தக்கூர் தனஞ்சய சிங், கௌட் யஸ்கி மற்றும் பிரகா ஜவதேகர ஆகியோரும் இந்திய வெளிவிவகார அமைச்சின் அபிவிருத்தி கூட்டு நிர்வாகத்தின் சிறப்பு செயலாளர் பி.எஸ். இராகவன், இந்திய வெளிவிவகார அமைச்சின் சிறப்பு செயலாளரும் நிதி ஆலோசகருமமான பிமல் ஜுல்கா ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இரண்டு நாட்கள் வட மாகாணத்தில் தங்கியிருந்து இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை இக்குழுவினர் பார்வையிடவுள்ளனர்.
இந்த குழுவினர் யாழ் இந்திய துணை உயர் ஸ்தானிகராலயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் பிரதிநிதிகள், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, பிரதேச சபை தவிசாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.