கீரிமலை பகுதியில் முதாட்டியின் சடலம் மீட்பு

body_foundகீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள கேணிக்கு அருகில் மூதாட்டி ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

70 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலமே இவ்வாறு இன்று மீட்கப்பட்டுள்ளது.

இவரின் சடலம் அடையாளம்காணப்படவில்லை என்றும், சடலத்தினை மல்லாகம் நீதிவான் பார்வையிட்ட பின்னர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts