சமூர்த்தி உத்தியோகஸ்தர்களால் 8 அம்சக் கோரிக்கை அடங்கிய மகஜர் கையளிப்பு

Samurdhiயாழ். மாவட்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினர் 8 அம்ச கோரிக்கைகள் உள்ளடங்களான மகஜர் ஒன்றினை பாரம்பாரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்துள்ளனர்.

யாழ். பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற யாழ். மாவட்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்விலேயே மேற்படி மகஜர் கையளிக்கப்பட்டது.

இவ்வாறு கையளிக்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் வருமாறு,

• யாழ். மாவட்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளில் நியமனக் கடிதங்கள் இன்றி பதில் கடமையாற்றுகின்றனர். (சிலர் மூன்று பிரிவுகளிலும் கடமையாற்றுகின்றனர்) அவர்களிற்கு பதில் கடமையாற்றுவதற்கு உதவி ஆணையாளரினால் நியமனக் கடிதம் வழங்கப்படல் வேண்டும்.

• பதில் கடமையாற்றும் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு அதற்குரிய கொடுப்பனவு வழங்கப்படல் வேணடும்.

• தற்போது வழங்கப்படும் பிரயாணப் படியான 400 ரூபாவினை 1,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும்.

• கடந்த வருடம் சமூர்த்தி உதவி ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு இணங்க சனி, ஞாயிறு தினங்களில் கடமையாற்றிய வெளிக்கள உத்தியோகத்தர்களிற்கு பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலுக்கமைய கொடுப்பனவு வழங்கப்படல் வேண்டும்.

• புத்தாண்டு சேமிப்பு தொடர்பாக அதிகமாக சேமித்த உத்தியோகத்தர்களிற்கு சுற்று நிருபத்தின் பிரகாரம் தனிப்பட்ட கௌரவிப்புச் சான்றிதழ் வழங்கப்படல் வேண்டும்.

• யாழ். மாவட்டத்தில் 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் சமுத்தி திட்டம் தொடர்பாக ஒரே நடமுறையினை கொண்டுவருதல் வேண்டும்.

• சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் இடமாற்றம் செய்யப்பட்டதும் தொழிற்சங்க சட்டவாக்கதிற்கு அமைவாக இடமாற்றசபை அமைக்கப்பட்டு மேற்கொள்ள வேண்டும்.

• தென்பகுதி சமூர்த்தி உத்தியோகத்தர்கள் அனுபவிக்கும் சகல நலன்களும் எமது உத்தியோகத்தர்களும் அனுபவிக்க நடவேடிக்கை எடுத்தல் வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை உள்ளடக்கி மகஜர் கையளிக்கபட்டுள்ளது. மேலும் இம்மகஜர் பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், யாழ். அரச அதிபர், யாழ். மாவட்ட செயலக சமூர்த்தி உதவி ஆணையாளர், சமூர்த்தி விவசாய மற்றும் ஆராச்சி உத்தியோகத்தர் சங்கம் ஆகியவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Related Posts