வடக்கு கிழக்கில் அதிக மழை பெய்யும்!- காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை

rainஇலங்கையில் அதிக இடியுடன் கூடிய மழைபெய்யும் என்று காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் அதிக அளவில் மழை பெய்யலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மாலை அல்லது இரவு வேளைகளில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும். மழை பெய்யும் காலப்பகுதியில் கடுமையான இடி மின்னல் காணப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மட்டக்களப்பு – கொழும்பு வரையான கடல் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்யும். இதனால் இந்த பகுதியில் கடல் சில சந்தர்ப்பங்களில் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Posts