யாழ். மாநகரசபை உறுப்பினர் அபூ – சுபியானுக்கு எதிரான சுவரொட்டிகள் யாழ். நாவாந்துறை பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன. யாழ். முஸ்லிம் மக்களே இடைத்தரகர்களிடம் ஏமாந்துவீடாதீர்கள்: சுயநல சுயேட்சை அரசியல்வாதி சுபியானின் முதலைக் கண்ணீர் என தலையங்கம் இடப்பட்டுள்ளது.
அத்துடன் யாழ். முல்லிம்களுக்கு தொல்லை கொடுக்காத காலமே கிடையாதென்றும் முஸ்லிம் வட்டாரத்தில் நடைபெறும் எல்லா நல்ல காரியங்களையும் குழப்பும் ஒரே ஆற்றல் உடையவன் இவன் மட்டும் தான் என்றும் அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.