யாழ்ப்பாணத்தில் பிறவுன் வீதியில் அமைந்துள்ள மென்பொருள் வடிவமைப்பு நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் 5 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூவர் நேற்று முன்தினம் கோப்பாய் பொலிஸாரினால் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் கொழும்பில் வைத்து குற்றப்புலனாய்வு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இங்கு பணியாற்றும் மேலும் ஒரு பணியாளரை கைது செய்யும் நோக்கில் வீட்டுக்கு வந்த கோப்பாய் பொலிஸார் அவர் வீட்டில் இல்லாததை அடுத்து அவருடைய மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றுள்ளதுடன் சகோதரியையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டி அனுப்பியுள்ளதாக தெரியவருகின்றது.
நந்தாவில் பகுதியில் தென்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையிலேயே இவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக பொலிஸார் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் சரியான காரணத்தினை உறுதிப்படுத்தமுடியவில்லை
கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் முழுமையான விபரங்கள் இதுவரை கிடைக்கவி்ல்லை.