கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு பிணை

judgement_court_pinaiகொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு கோவில் வீதி, நல்லூர் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் ஜெனிசீலன் என்பவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு எதிராக கோப்பாய் பொலிஸாரினால் யாழ். நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இருவருக்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மேற்படி வழக்கு நெற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொலை குற்றஞ்சாட்டப்பட்ட இருநபர்களையும் 2 இலட்சம் ரூபா காசுப் பிணையிலும், சந்தேக நபர்கள் இருவரையும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் மாதத்தின் கடைசி ஞாயிறு கிழமை காலை 9.00 மணிக்கும் 12.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கையொப்பமிடுமாறும் யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் சார்பில், சட்டத்தரணி வி.திருக்குமரன் மற்றும் அரச சட்டவாதி நளினி கந்தசாமி ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

Related Posts