பளையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரத பாதையிடும் பணிகள் இந்திய நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டு வந்தது
இந்தநிலையில் பாதையமைப்பு பணிகளை மேற்கொள்ளும் பகுதிகளில் பெரும்பாளானவை சதுப்பு நிலங்களாகும், இவ்வாறான பகுதிகளை நிரப்புவதற்காக குறுனிக்கற்கள் தேவைப்படுகின்றன
அவற்றை முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்று இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும் இதனை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்க அதிகாரிகள் அனுமதி வழங்க தாமதித்து வருவதாக நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளர்
இதனால் இந்த பணிகளை முன்னெடுக்க முடியாதிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.