யாழ்ப்பாணத்தில் உருவாகும் புதிய வங்கிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து சென்ற சிலர் யாழ்ப்பாணத்தில் இவ்வாறு வங்கிகளை அமைத்து பாரியளவில் மக்களின் பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களது பணத்தை பாரியளவில் மோசடி செய்து, தப்பிச் சென்றுள்ளனர்.
உயர் வட்டி வீதங்களை வழங்குவதாகத் தெரிவித்து இவ்வாறு மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
பலகோடி ரூபா இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது,கொழும்பு சக்வித்தி ரணசிங்க, ஹம்பாந்தோட்டை தடுவம் முதலாளி போன்றோரைப் போன்றே பாரியளவில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மாதாந்தம் நூற்றுக்கு நான்கு வீத வட்டி வழங்குவதாகத் தெரிவித்து இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.
ஆரம்ப காலத்தில் உரிய முறையில் வட்டிப்பணம் வழங்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையில் இவ்வாறான மூன்று வங்கிகள் இயங்கி வந்தன.
பல கோடி ரூபா பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.
பத்து லட்சம், இருபது லட்சம் மற்றும் ஒரு கோடி ரூபா வரையில் இந்த போலி வங்கிகளில் மக்கள் வைப்புச் செய்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.