யாழில் தென்பகுதி வியாபாரிகளால் உள்ளூர் வியாபாரிகள் பாதிப்பு

vegitableயாழில் தென்பகுதி வியாபரிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக யாழ்.உள்ளுர் வியாபாரிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைப் படுத்த முடியாதவாறு இருப்பதாக வர்த்தக சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தென்பகுதியிலிருந்து யாழ். நகரின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடமாடும் மரக்கறி வியாபார நடவடிக்கைகளால் உள்ளூர் மரக்கறி வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக தென்பகுதி வியாபாரிகளினால் யாழ். நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இவ்வாறு வாகனங்களில் மரக்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகைப் பொருட்கள் எடுத்துவரப்பட்டு சந்திகளிலும் வீதியோரங்களிலும் வைத்து விற்பனை செய்யப்படுகின்றது.

இதனால் மரக்கறி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல சரக்குக் கடைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை, விலைகளிலும் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்காரணமாக எமது உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் நுகர்வு வீதமும் குறைந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உள்ளூர் வியாபாரிகளினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.

தற்சமயம் மரக்கறி மற்றும் உப உணவுப் பொருட்கள் என்பவற்றின் விலைகள் அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts