இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வீட்டுத்திட்ட பணிகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக, முதற்கட்ட பணிகள் மருதங்கேணி, சாவகச்சேரி, தெல்லிப்பழை ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இப்பிரதேசங்களில் 397 பேர் தெரிவு செய்யப்பட்டு வீட்டுத்திட்டபணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இரண்டாம்கட்ட பணிகள் சங்காணை, சண்டிலிப்பாய், கோப்பாய், வேலணை, தெல்லிப்ழை, மருதங்கேணி ஆகிய பிரதேச செயலர் பிரிவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதில் 2198 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு தற்போது விண்ணப்பபடிவ விநியோகம் இடம்பெற்று தரவுகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மூன்றாம் கட்டப்பணிகளை முன்னெடுப்பதற்காக யாழ்.மாவட்டத்தில் 6105 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இத்திட்டம் யாழ்.மாவட்டத்தில் உள்ள 176 கிராம அலுவலர் பிரிவில் முன்னெடக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.