யாழ். புத்தூர் பகுதியில் பாதுகாப்பு படையினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு பயனாளியிடம் யைளிக்கப்பட்டுள்ளது.
யாழ். புத்தூர் கிழக்கு J/278 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்த குடும்பம் ஒன்றிற்கு சுமார் 5 லட்சம் பெறுமதியில் 511 விஜயபாகு படையினரால் இவ்வீடு அமைத்துகொடுக்கப்பட்டுள்ளது.
வீடு கையளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதன்போது, வீட்டின் திறப்பினை வீட்டு உரிமையாளரிடம் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க சம்பிரதாய பூர்வமாக கையளித்தார்.
இந்நிகழ்வில், 511 படைப்பிரிவின் இராணுவ அதிகாரி ஹேமந் மற்றும் பிரிகேடியர் சந்தன குணவர்த்தன, மற்றும் இராணுவ அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் உட்பட தேசிய கல்வியற் கல்லூரி அதிபர் யோகராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஜெனிவா கூட்டத்தொடர் இலங்கைக்கு தேவையற்ற ஒன்று
ஜெனிவா கூட்டத்தொடர் இலங்கை அரசிற்கு தேவையற்ற ஒன்று என யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
தற்போது நாம் வாழும் அமைதியான சூழல் எப்படி வந்தது என எண்ணிப்பார்க்க வேண்டும். நாமும் எமது அரசாங்கமும் அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்கும் உட்கட்டமைப்பு, அபிவிருத்தி, பாடசாலை, மருத்துவமனை, வீதி, என சகல விடயங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றோம். அத்துடன், அம்மக்களுக்காக அர்ப்பணிப்புடன், செயலாற்றும் இவ்வேளையில், மிக சிறிய குழுவினர் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் பல வெளிநாட்டவர்களின் உந்துதலினாலும் எமக்கு எதிராக பல பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளார்கள்.
‘காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபடவில்லை. காணி சுவீகரிப்பில் இராணுவம் ஈடுபட்டு வருவதாக சில அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் வதந்திகளை பரப்பி வருகின்றனர்’ என்று யாழ்.மாவட்ட பாதுபாப்பு படைகளின் கட்டடைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
’30 வருட யுத்தத்தில் இருந்து மக்களை மீட்டெடுத்து கடந்த நான்கு வருடங்களாக இராணுவத்தினர் பல்வேறு அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கல்வி, மருத்துவம், வீடமைப்பு போன்ற அபிவிருத்திப்பணிகளில் பங்கெடுத்து வருகின்றனர். மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்றவர்கள் மக்களுக்காக என்ன அபிவிருத்திப் பணிகளை செய்திருக்கின்றார்கள் என்று நான் கேள்வி கேட்க விரும்புகிறேன்?
ஜெனீவாக் கூட்டத்திற்கு இங்குள்ள அரசியல் வாதிகள் சிலர் சென்று தேவையற்ற கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இவ்வாறு ஜெனீவா சென்று செலவுசெய்யும் பணத்தினை பிரயோசனமாக மக்களின் அபிவருத்திக்குப் பயன்டுத்தி மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்தத முன்வரவேண்டும’ என்றார்.
இதேவேளை, ‘விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட மக்கள் இராணுவத்தினருடன் மிக நெருக்கமான உறவுகளைப் பேணிவருகின்றனர்.
இந்தவகையில் ‘இராணுவம் என்ன செய்கிறது’ என்றும் ‘இராணுவம் நில அபகரிப்பில் ஈடுபடுவதாகவும்’ சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
இராணுவம் அவ்வாறான நிலஅபகரிப்பு செயற்பாடுகளை செய்யவில்லை. இவ்வாறான பாதகமான கருத்துக்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்.
அத்துடன் தற்போதுள்ள சமாதான சூழலில் வாழ்ந்து வரும் நாங்கள் சிலரின் தப்பான எண்ணங்களில் இருந்து விடுபட்டு சாதகமான விடயங்கள்
பற்றி சிந்திக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.