வழி அனுமதிப்பத்திரமின்றி கொழும்பு சென்ற பேருந்து பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது

police_check-postயாழ்ப்பாணம் – கொழும்பு போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேரூந்துகளுக்கு வழி அனுமதிப்பத்திரமின்றி போக்குவரத்தில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.

இவ்வாறு வழி அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு பயணத்தை மேற்கொண்ட தனியார் பேருந்து ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் பளையில் வைத்து போக்குவரத்து கண்காணிப்புப் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சுமார் 40 பயணிகளுடன் பயணத்தை மேற்கொண்ட குறித்த தனியார் பேருந்திற்கான வழி அனுமதிப்பத்திரமும், வரி அட்டையும் இருக்கவில்லை. அத்துடன் சாரதி மதுபோதையில் இருந்ததாகப் பயணிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக உடனடியாக குறித்த பேருந்தினைப் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

பெருமளவு பெண் பயணிகளுடன் சென்ற இந்தப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் தமது பயணத்தைத் தொடர்வதில் பெரும் நெருக்கடி நிலையை எதிர்கொண்டு அவதிக்குள்ளாகியதாகப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts