யாழ்ப்பாணத்தில் தினமுரசு பத்திரிகையின் பிராந்திய செய்தியாளர் ஒருவர் இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளார்.
பொலிகண்டி பகுதியைச் சேர்ந்த கே.விசிந்தன் (வயது 25) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
அச்சுவேலி, தொண்டமாறு தம்பனை சந்திப் பகுதியிலேயே நேற்று புதன்கிழமை இரவு இந்த தாக்குதல்ச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே வழிமறித்து தாக்கியுள்ளதாக தாக்குதலுக்கு உள்ளான செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, தாக்குதலுக்கு உள்ளான நபரை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கமல் (கமலேந்திரன்) மற்றும் பருத்தித்துறை அமைப்பாளர் ரங்கன் வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.