வடமாகாண ஆசிரிய ஆலோசகர்களுக்கான கலந்துரையாடல் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடல் யாழ். நாவலர் கல்வி நிலையத்தில் சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் இக்கலந்துரையாடலின் பின்னர் வடமாகாண வலய கல்வி பிரதிநிதிகளுக்குமான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.