யாழ். மாவட்ட நீதிமன்ற பதிவாளர்கள் நான்கு பேருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இந்த திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யாழ். மேல் நீதிமன்றில் பதிவாளராக கடமையாற்றி வந்த எம்.எஸ்.எம். நஸீர் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றிற்கும் யாழ். மாவட்ட நீதிமன்றில் பதிவாளராக கடமையாற்றிய ரி.சுரேந்திரன் யாழ். மேல் நீதிமன்றிற்கும், பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் கடமையாற்றிய எஸ். இராஜேஸ்வரன் சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றிற்கும், சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றில் கடமையாற்றிய மீரா வடிவேற்கரசன் யாழ். மாவட்ட நீதிமன்றிற்கும் இடமாற்றப்பட்டுள்ளார்கள்.