விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு :- அரசாங்க அதிபர்

nelநெல் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் நெல் விற்பனையில் ஏற்படும் நெருக்கடிகள் குறித்த கலந்துரையாடலின் போதே நெல்லினை கொள்வனவு செய்தற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அரச அதிபர் கூறினார்.

அந்தவகையில், கைதடி மற்றும் சங்கானை பகுதிகளில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல்லினை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதனடிப்படையில், சம்பா நெல்லினை ரூ.35 வீதமும், நாட்டரிசியினை ரூ.32 வீதமும் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரு சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக விவசாயிகள் நெல்லினை சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் யாழ். மாவட்ட அரச அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts