ஜும்மா பள்ளிவாசல் வீதியில் தீ விபத்து

Fire-Logo-யாழ். ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள குஷன் கடை ஒன்றில் இன்று திங்கட்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக அந்தக் கடையில் இருந்த ஒருதொகுதி பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

கடையின் ஒரு பகுதியில் தீ பரவியுள்ளதாகவும் மின்னொழுக்குக் காரணமாகவே இந்த தீ பரவியுள்ளதாகவும் கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.

இந்த தீ விபத்துக் காரணமாக 15 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Related Posts