யாழ். வேம்படி வீதியில் அமைக்கப்பட்ட ‘யாழ். நகர் அங்காடி கடைத்தொகுதி’ சனிக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானாந்தா பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து இந்த கடைத்தொகுதியைத் திறந்துவைத்தார்.
யாழ். நகர் அங்காடி கடைத்தொகுதியில் 107 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துக் கடைகளும் ஒரே மாதிரியாக அமைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க ஒவ்வொரு கடையும் 36 ஆயிரம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் தெரிவித்தார்.
இந்தத் திறப்பு விழாவில் யாழ். மாநகர ஆணையாளர் பிரணவநாதன், மாநகர சபை உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.