அரியாலை கிழக்கு கிராம அலுவலர் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கிராம மக்கள் நேற்றய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
J/90 கிராமசேவகர் கிராம அலுவலரே இனந்தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சூத்திரதாரிகளை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தியும், பொது அமைப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டன.
இது தொடர்பில் நல்லூர் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.