இன்று மட்டும் 30 பேர் நாய்க்கடிக்கு இலக்காகியுள்ளனர்

dogயாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறுவர்கள், பெரியவர்கள் என 30 பேர் இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் நாய் கடிக்கு இலக்காகிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதேவேளை,கட்டாக்காலி மற்றும் வளர்ப்பு நாய்களின் கடிக்கு இலக்காகியவர்கள் தாமதிக்காது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2010/2011 ஆம் ஆண்டுகளில் 30 பேர் நாய்க்கடிக்கு இலக்காகி மரணித்துள்ளனர்.

Related Posts