வட இலங்கை சங்கீத சபைக்கான புதிய கட்டிடம் யாழ்ப்பாணம் மருதனாதமடத்தில் கடந்த 23ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டு கட்டிடத்தினை திறந்து வைத்தார்கள்.
பத்து மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட இப்புதிய கட்டிடம் மூலம் வாய்ப்பாடு, நடனம், புல்லாங்குழல், வயலின், வீணை, மிருதங்கம், பண்ணிசை உள்ளிட்ட பல்வேறு கலை வகுப்புகள் நடைபெறவுள்ளன.
கடந்த 80 வருட காலத்திற்கும் மேலாக வட இலங்கை சங்கீத சபை கலைச் சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வடஇலங்கை சங்கீத சபையின் தலைவரும், யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளருமான உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர், மற்றும் ஆளுநர் ஆகியோர் உரையாற்றினர். இக்கட்டிடத்தை மேலும் செம்மைப்படுத்துவதற்கு அமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோர் ஒரு மில்லியன் ரூபாவை முதற்கட்டமாக அன்றைய தினம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இதில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் வை.செல்வராஜா உள்ளிட்ட துறைசார்ந்தோரும் கலந்து கொண்டனர்.