செனல் 4 தொலைக்காட்சி இலங்கையை விலை பேசுகிறது:- யாழ். தளபதி

mahinda_hathurusingheபோர்க்குற்ற படங்கள் என போலியான புகைப்படங்களை வெளியிட்டு செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையை விலை பேசுகின்றது’ என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க குற்றஞ்சாட்டினார்.

‘யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினர் காணிகளை அபகரிப்பதாக மக்களை பயப்படுத்தி போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். அமைதி இருக்க வேண்டுமானால் அரச நிறுவனங்கள் முழுமையாக செயற்பட வேண்டும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘படைகளின் செயற்பாடு மக்களின் அமைதியை மேம்படுத்துவதற்கு பயன்படுகிறது. அதற்காக எமது படையினர் பாடுபடுகின்றனர். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், மக்களின் காணிகளை இராணுவம் சுவீகரிப்பதாக கூறி மக்களை போராட்டத்திற்கு அழைத்து பூச்சாண்டி காட்டுகின்றார்.

அத்துடன், அரசியல்வாதிகள் இன குரோதத்தினை ஏற்படுத்தி அமைதியை குழைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்’ என்று யாழ். கட்டளைத் தளபதி மேலும் கூறினார்.

Related Posts