28இல் 28ஆவது பட்டமளிப்பு விழா

jaffna-universityயாழ். பல்கலைக்கழகத்தின் 28 ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 28ஆம் திகதி வியாழக்கிழமை கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார்.

குறித்த பட்டமளிப்பு விழாவில் 1236 பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

இது தொடர்பில் பதிவாளர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள பட்டமளிப்பு நிகழ்வில் 1236 பேருக்கு பட்டம் வழங்கப்படவுள்ளதுடன் மேலும் இரண்டு பேருக்கு கலாநிதிப்பட்டமும் வழங்கப்படவுள்ளது. இதில் உள்வாரி மற்றும் வெளிவாரி ஆகிய பிரிவினர்களும் உள்ளடங்குகின்றனர்.

யாழ்பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சிவசூரிய தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் 6 அமர்வுகளைக் கொண்டதாக நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts