யாழில் குடும்பஸ்தரை காணவில்லை

missing personயாழில் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ். கொய்யாத்தோட்டம் பால்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே காணாமல் போயுள்ளார்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொய்யாத்தோட்டம் வீட்டில் இருந்து பருத்தித்துறை தம்பசிட்டியில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி காலை 10 மணியளவில் சென்ற கணவன் இன்றுவரை வீட்டிற்கு திரும்பவில்லை.

கணவரின் தாயாரின் வீட்டில் விசாரித்த போது அவர் அங்கு செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இது தொடர்பில் மனைவி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

Related Posts