ரஷ்யாவில் எரிநட்சத்திரம் விழுந்து வெடித்ததில் 1100 பேர் காயம்

venkalரஷ்யாவின் தென்பகுதியில் எரிநட்சத்திரமொன்று விழுந்து வெடித்ததில் 1100 க்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி எரிநட்சத்திரத்தின் அதிர்வலைகள் காரணமாக அப்பகுதியிலுள்ள வீடுகளின் கண்ணாடிகள் உடைந்தும் வீடுகளின் மேற்கூரைகள் விழுந்துமே அப்பகுதி மக்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இருந்து 1,500 கிலோ மீற்றர் தொலைவில் யுரால் பகுதியில் உள்ள செல்யபின்ஸ்க் என்ற இடத்திலேயே இந்த எரிநட்சத்திரம் விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது.

அப்போது நிலநடுக்கத்தைப் போல மிகப் பெரிய அதிர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. வானிலிருந்து மிக வேகமாக தரையை நோக்கி பாய்ந்து வந்த இந்த நட்சத்திரம் தரையை நெருங்கும்போதே வெடித்துச் சிதறியுள்ளது. அப்போது மிக பயங்கரமான வெடிச் சத்தம் எழுந்தது.

அதைத் தொடர்ந்து பெரிய அளவில் தீப் பிழம்பு எழுந்ததோடு கடும் அதிர்வும் உண்டானதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வெடிப்பின்போது தொலைத் தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டு விட்டதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Related Posts