யாழில் வீடொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள், கஞ்சாவுடன் மூவர் கைது !

யாழ்ப்பாணத்தில் நான்கு வாள்கள் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களுடன் மூவர் திங்கட்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாதகல் பகுதியில் போதைப்பொருள் வியாபார கும்பல் ஒன்று , கூரிய ஆயுதங்களுடன் வீடொன்றில் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , குறித்த வீட்டினை இளவாலை பொலிஸார் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர்.

அதன் போது , மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் , நான்கு வாள்கள் மீட்கப்பட்டன. தொடர் தேடுதலின் போது, பிறிதொரு இடத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 600 கிராம் கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டன.

அதனை அடுத்து வீட்டில் இருந்த மூன்று இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts