ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உரிமையாளர்கள் இணங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக வர்த்தக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.