சொந்த நிலங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழு இந்தப் போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது.
வலி.வடக்கில் இருந்து 1990 ஆம் ஆண்டு வெளியேறிய மக்கள் 23 வருடங்கள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்றப்படாமல் முகாம்களிலும் தனியார் காணிகளிலும் ,உறவினர்களுடைய வீடுகளிலும் வசித்து வருகின்றனர்.
யுத்தம் முடிவடைந்து 4 வருடங்கள் ஆகியும் உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் நிலங்களை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.
எனவே சொந்த நிலங்களில் குடியமர்த்தி எமது தொழில்களையும் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும். என வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தென்னிலங்கையைச் சேர்ந்த கட்சிகள் மற்றும் மக்கள் எனப்பெருமளவானோர் கலந்து கொண்டுள்ளளனர்.
ஆரம்பமாகியுள்ள போராட்டமானது மாலை 4 மணிக்கு நிறைவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.