பட்டதாரிகளை அரச சேவைக்குள் உள்வாங்கும் திட்டம் தொடர்பில் அறிவிப்பு!

35000 பட்டதாரிகளை அரச சேவைக்கு உள்வாங்குவது தொடர்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டுள்ளார்

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

30000 அல்லது 35000 என்று கூறமுடியாது என்றும் வழமை போன்று அங்கு பட்டதாரிகள் குழுவிருப்பதால் ஒரு பகுதிக்கான ஆட்சேர்ப்பு உள்ள வெற்றிடங்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்

அத்துடன், அரச சேவையில் பயன்படுத்தப்படாத பட்டதாரிகள் குழுவொன்று இருப்பதாகவும், அதனைக் கையாள்வதற்காக மற்றுமொரு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும், அதற்கமைவாக அளவை நிர்ணயித்து தேவையான ஆட்சேர்ப்புகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts