2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (23) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு கூறினார்.
புலமைப்பரிசில் பரீட்சையுடன் ஏற்பட்ட நெருக்கடியினால் பெறுபேறுகளை மதிப்பிடுவதை இடைநிறுத்தி நீதிமன்றம் வழங்கிய உத்தரவு காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.