காதலர் தினம் யாருக்கு?

இன்று காதலர் தினம் என்று பலர் மயக்கத்தில் அலைவார்கள்.உண்மையில் இது காதலிப்போர் தினம் அல்ல.அன்பை கொண்டாடுவோர் அல்லது நேசிக்கும் மனதினருக்கான ஒரு நாள்.என்ன வகையான் தினம் என்றாலும் அது மேலை நாட்டில் இருந்துதான் நமக்கு இறக்குமதி யாகிறது.இந்த தினங்களில் குறிப்பிட்ட விடயத்தை விட வியாபர நோக்கங்களே அடிப்படை அமைப்பாக விருப்பமாக கொண்டுள்ளது.அதற்காகவே ஒவ்வொரு நாளும் அறிவிக்கப்படவும் செய்கின்றனர்.

அந்த நாளுக்காக ஏதாவது ஒரு காரணத்தை வரலாற்றின் பக்கங்களில் இருந்து சுரண்டி எடுத்து விடுகின்றனர்.இந்த காதலர் தினத்தில் நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டியது ,காதல் என்ற பெயரில் ஒரு பெண்ணையே அமிலம் ஊத்தி கொன்ற கய்வனைப்போல் கண்மூடித்தனமான காதல் போதைக்கு ஆளாகக் கூடாது என்பதுதான்.ஒரளவு சிரித்தாற்பொல் பேசி விட்டாலே.அல்லது வழியில் பார்த்து அறிமுகமானவருக்கான சிரிப்பை வழிய விட்ட பெண்கள் எல்லோரும் தன்னை காதலிப்பது என்ற அவலமான முடிவுக்கு வந்து ஆசைகளை வளர்த்துக்கொள்வது மிக கொடுமை.

அது போல் ஒருவன் வளர்த்த காதல் என்ற தவறான முடிவுதான் வினோதினி என்ற இளம்பெண்ணை கல்லறைக்கு அனுப்பி விட்டது.இதுபோல நிறைய கதைகள்!

கஷ்டத்தில் வளர்த்து,துன்பத்தில் பொறியியல் பட்டதாரியாக்கி குடும்ப துன்பங்கள்-ஏழ்மை நீங்கிவிடும் என்று பனி கிடைத்த மகிழ்வில் இருந்த அனைவர் மனதிலும் தாளா சோகத்தை ஒரு மடையன் நொடிப்பொழுதில் தந்து விட்டான்.அது போன்ற கனவுக்காதல் கொண்டு நீங்கள் ஏதாவது ஒரு பெண்ணுக்கு காதலர்தின வாழ்த்து-பரிசு அனுப்பி குடும்பத்திலும் ,அப்பெண்ணின் வாழ்க்கையிலும் களங்கத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்.

வினோதினியின் மரணம் அதைத்தான் நமக்கு கூறுகிறது.காதலர் தினம் காதலிப்பவர்களுக்கு மட்டுமல்ல.நேசிப்பவர்களுக்கும்தான்.அந்த நேசிப்பை உனது தோழன்,குடுமபத்தினர்,உறவினர்களுக்கு தெரிவியுங்கள்.உண்மையான நேசிப்பு தினத்தை கொண்டாடுங்கள்.உங்கள் கொண்டாட்டம் அமைதியான குடும்ப பெண்கள் வாழ்வில் புயலை கொண்டுவந்து விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

இனி வாலண்டைன் தினம் உருவான கதை:

பிப்ரவரி -14ம் தேதி மத்திய இங்கிலாந்தில் பறவைகள் மூலமாகத் தங்கள் இணை களைத் தேர்வு செய்த ஆங்கிலேயர்கள் தான் இந்த நாளை முதலில் கொண்டாடியதாக தெரிகிறது.
ரோமானிய அரசனின் ஆட்சிக் காலத்தில்தான் அந்த நாள் வாலண்டைன் தினம் என கொண்டாடத்துவங்கியதற்கான சான்றுகள் உள்ளன.

ரோமானிய மன்னன் கிளாடிஸ் II கொடூரமாகவும், கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த காலகட்டம் அது! முட்டாள் தனமாக தமது இராணுவத்திற்கு கட்டளை பிறப்பிப்பான். இதனால்இராணுவத்திலிருந்து வீரர்கள் வெளியேறினர். புதிதாக இராணுவத்தில் சேரயாரும் முன்வரவில்லை.

தனது மந்திரி பரிவாரங்களை அழைத்து ஆலோசனைநடத்தினான். உருப்படியாக ஒருவரும் சொல்லவில்லை என கோபப்பட்டான். அந்தப்புரத்தில் தனது அந்தரங்க நாயகியுடன் சல்லாபமாக கிளாடிஸ் இருந்தநள்ளிரவு வேளையில் திடீரென ஞானோதயம் ஒன்று பிறந்தது. மஞ்சத்தை விட்டுஎழுந்து மளமளவென அரசவுடை தரித்து தர்பாருக்கு கிளம்பினான். மூத்தஅமைச்சரை அழைத்து வரச் சொன்னான். அர்த்த ராத்திரியில் என்னமோ ஏதோவெனஅவரும் பதறியடித்து ஓடி வந்தார்.”நாட்டு மக்களுக்கு ஓர் அறிவிப்பைஉடனடியாக அறிவிக்கச் செய்யுங்கள், ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணமேசெய்து கொள்ளக்கூடாது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்துசெய்யப்படுகிறது.

இந்த அரச கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைதுசெய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர்அறிவிக்கப்படும் ஒரு நாளில் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலைதுண்டிக்கப்பட்டுக் கொல்லப்படுவார்கள். இது இன்றே, இப்போதே அமலுக்குவருகிறது” என்றான் அரசன்.அமைச்சர் ஏதோ சொல்ல வாயெடுக்க…கிளாடிஸின் உறுமல்,” மறை கழன்ற மன்னனிடம்பேசிப் பயனில்லை என முடிவு செய்து அவ்வாறே அறிவித்தான். அரசனின்அறிவிப்பை அறிந்து ரோமானியர்கள் அதிர்ந்து போனார்கள்.
அரசனின் அறிவிப்புக்கு காரணம், திருமணமானவர்கள் தங்கள் அன்பு மனைவியைப்பிரிந்து வரத் தயங்குகிறார்கள். திருமணமான வாலிபர்களோ தங்கள் காதலியைவிட்டுவிட்டுப் பிரிந்து வரத் தயங்குகிறார்கள். குடும்ப வாழ்க்கை,அன்புக் காதலி இல்லாதபட்சத்தில் மனம் வெறுத்து இராணுவத்தில் சேருவார்கள். போரிலும் மூர்க்கத்தனமாகப் போரிடுவார்கள்.
வெற்றி எளிதில் கிட்டும்என்று மன்னனுக்கு எழுந்த எண்ணமே இந்த அறிவிப்பை வெளியிடச் செய்தது. திருமணங்கள் கனவாகிப் போனதை எண்ணி சோகக் கண்ணீரில் ரோம் மிதந்தது.

இரு மன இணைப்பை அரசன் அறுத்தெறியத் துணிந்தது அநியாயம் என்றுகொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியாரான வாலண்டைன் அரச கட்டளையை மீறி இரகசியமாகத் திருமணங்களை நடத்தி வைத்தார். எட்டப்ப ஒற்றர்கள் மூலம் இந்தச் செய்தி அரசனுக்கு எட்டிவிட வாலண்டைனைக் கைது செய்து, மரண தண்டனை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது.

இடைப்பட்ட காலத்தில் சிறையில் இருந்த பாதிரியார்வாலண்டைனுக்கும் சிறைக் காவலர் தலைவனின் பார்வை இழந்த மகள்அஸ்டோரியசுக்கும் அன்பு பூத்தது. மரணத்தின் வாசற்படியில் நின்றுகொண்டிருந்த வாலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள். இதை அறிந்தசிறைத் துறைத் தலைவன் மகளை வீட்டுச் சிறையில் வைத்தான். இழந்த கண்கள்கிடைத்தது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸின் கனவுகள்சிதைந்தது. உருக்குலைந்து போனாள், அஸ்டோரியஸ்.

அஸ்டோரியசுக்கு, அத்தனைகட்டுக் காவலையும் மீறி காகித அட்டை ஒன்று, செய்தி சுமந்து வந்தது.”விழி இருந்தும்வழி இல்லாமல் – மன்னன்பழி தாங்கிப் போகிறேன்.விழி இழந்து – பார்க்கவழி இழந்து, நீ மனவலி தாங்காது கதறும்ஒலி கேட்டும், உனை மீட்கவழி தெரியாமல் மக்களுக்காகபலியாடாய் போகிறேன்; நீஒளியாய் வாழு! பிறருக்குவழியாய் இரு!! சந்தோஷஒளி உன் கண்களில்மிளிறும்!! -உன்னுடைய வாலண்டைனிடமிருந்து!

அன்றிலிருந்து இன்று வரை நேசிப்பாளர்களிடையே பரந்து நிற்கிற வாசகமாகும்.இந்த கதை உண்மையாக இருந்தால் உலகின் முதல் வாலண்டைன்அட்டை இதுவாகத்தான் இருக்கும்.

வாலண்டைனின் செய்தியை, தோழி வாசிக்க அஸ்டோரியஸின் கண்ணீடன் கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில்தான் வாலண்டைன் கல்லால் அடித்து வதை செய்த பின் தலை துண்டித்து எறியப்பட்டது .

அந்த நாள்270வது வருடம் பிப்ரவரி மாதம் 14ம் தேதி.அரச கட்டளையை மீறி மனங்களை இணைய வைத்து தன்னையே பலி கொடுத்த வாலண்டைன் “ரோம் ” மக்களின் மனங்களில் மறையாமல் நிறைந்திருந்தார்.ரோமானியசர்ச்சுகள் ஐரோப்பியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த போது “பாகான்”விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டது. பாகான் என்றால் மதமற்றவன் என்றுபொருள். பின்னர் இதுவே வாலண்டைன் தினமாகக் கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய200 வருடங்களுக்குப் பிறகு போப்பாண்டவர் ஜெலாசியஸ் I (496 ம் ஆண்டு)”வாலண்டைனை”ப் புனிதராக அறிவித்தார். அன்றிலிருந்து மனிதப் புனிதர்வாலண்டைன் தினம் (St.Valentine’s Day) உலகம் கொண்டாடப்பட்டது .அது மெதுவாக காதலர் தினமாக இன்றைக்கு உருமாறி விட்டது.

Related Posts